53-வது பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியின் இரண்டாம் நாள் முடிவு



53-வது பி.எஸ்.ஜி கோப்பைகான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கடந்த ஞாயிறன்று (ஆகஸ்ட் 27) துவங்கி வரும் 31 ஆம் தேதி வரை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் அமைந்துள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.

இப்போட்டியின் இரண்டாம் நாள் நடைபெற்ற முதல் போட்டியில் ஆர்.சி.எஃப். அணியை எதிர்த்து அரைஸ் அணி விளையாடியது. இதில் ஆர்.சி.எஃப். அணி 96 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய அரைஸ் அணி 88 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது.



இரண்டாவது போட்டியில் இந்திய ராணுவ அணியை எதிர்த்து கேரள மாநில மின்சார வாரிய அணி விளையாடியது. இதில் இந்திய ராணுவ அணி 84 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய கேரள மாநில மின்சார வாரிய அணி 66 புள்ளிகள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

மூன்றாவது போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை எதிர்த்து சுங்கம் அணி விளையாடியது. இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 82 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய சுங்கம் அணி 71 புள்ளிகள் பெற்றது.

4-வதாக நடைபெற்ற போட்டியில் விஜயா வங்கி அணியை எதிர்த்து பஞ்சாப் போலீஸ் அணி விளையாடியது. இதில் பஞ்சாப் போலீஸ் அணி 73- 57 என்ற புள்ளியில் வெற்றி பெற்றது.

Newsletter