53-வது பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி துவக்கம்



53-வது பி.எஸ்.ஜி கோப்பைகான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கடந்த ஞாயிறன்று (ஆகஸ்ட் 27) முதல் 31 ஆம் தேதி வரை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் அமைந்துள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் பங்கேற்கும் அணிகளில் இருந்து அகில இந்திய அளவில் மிகச்சிறந்த 8 ஆண்கள் அணி தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் மூன்று நாட்கள் சுழல் முறையிலும். பின்பு நாக்கவுட் முறையிலும் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் அறையிறுதிக்கு தகுதி பெறும். அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டியில் பங்கேற்கும்.

பிஎஸ்ஜி கோப்பைக்கான ஆண்கள் அணியில்  à®ªà®žà¯à®šà®¾à®ªà¯ மாநில போலீஸ் அணி, கப்புர்தலா - ஆர்சிஎஃப் அணி, புனே - இந்திய ராணுவம் அணி, சென்னை - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி, பெங்களூரு - விஜயா வங்கி அணி, திருவனந்தபுரம் - கேரள மின்சார வாரியம் அணி, சென்னை - சுங்க வரித்துறை அணி மற்றும் சென்னை - அரைஸ் ஸ்டீல்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

5 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு வழங்கப்படும் பரிசுகள் விபரம்:-

முதல் பரிசு ரூ. 1 லட்சம் மற்றும் பிஎஸ்ஜி சுழல் கோப்பை, இரண்டாம் பரிசு ரூ.50 ஆயிரம், முன்றாம் பரிசு ரூ.25 ஆயிரம், நான்காம் பரிசு ரூ. 15 ஆயிரம், சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

முதல் போட்டியில் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை எதிர்த்து கேரள மாநில மின்சார வாரிய அணி விளையாடியது. இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 77 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய கேரள மாநில மின்சார வாரிய அணி 66 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது.



இரண்டாம் போட்டியில் பஞ்சாப் போலீஸ் அணியை எதிர்த்து சென்னை அரைஸ் ஸ்டீல்ஸ் அணி விளையாடியது. இதில் பஞ்சாப் போலீஸ் அணி 88 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய அரைஸ் ஸ்டீல் அணி 57 புள்ளிகள் எடுத்தது.



மூன்றாவது போட்டியில் ஆர்.சி.எப் அணியை எதிர்த்து விஜயா வங்கி அணி விளையாடியது. இதில் விஜயா வங்கி அணி 79 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய ஆர்.சி.எஃப் அணி 66 புள்ளிகள் பெற்று தோல்வியடைந்தது.



நான்காவது போட்டியில் புனே இந்திய ராணுவ அணியை எதிர்த்து சென்னை சுங்கம் அணி விளையாடியது. இதில் இந்திய ராணுவ அணி 80 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய சுங்கம் அணி 61 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது.

Newsletter