அண்ணா பல்கலை சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி வெற்றி

அண்ணா பல்கலைக் கழகத்தின் 10-வது மண்டலத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி கடந்த ஒரு வாரகாலமாக கோவை குனியமுத்தூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டிகளில் மொத்தம் 30 கல்லூரிகள் பங்கேற்று விளையாடியது. புள்ளிகள் அடிப்படையில் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

முதல் அரையிறுதிப் போட்டியில் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ஈஸ்வர் பொறியியல் கல்லூரியினை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. அதேப் போன்று மற்றொரு போட்டியில் இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஜேசிடி பொறியியல் கல்லூரியினை வென்று இறுதிப் போட்டிக்கு தேர்வு பெற்றது.



இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி சாம்பியன் பட்டத்தினை வென்றது. இரண்டாம் இடத்தினை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி பெற்றது. மூன்றாம் இடத்தினை ஜேசிடி கல்லூரி பெற்றது.

இப்போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பையினை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கே.எஸ்.ஜூன்மார்சலின் வழங்கி பாராட்டினார்.

முதல் இடத்தை பெற்று சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் கிரிக்கெட் வீரர்களுக்கு இக்கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, முதன்மை நிர்வாக அலுவலர் சுந்தரராமன், முதல்வர் ஜேனட், விளையாட்டுத் துறையின் இயக்குநர் சுரேஷ்குமார், பேராசிரியர்கள் உட்பட பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Newsletter