53-ம் ஆண்டு பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய கூடைபந்துப் போட்டி ஆகஸ்ட், 27-யில் துவக்கம்

கோவையில் 53-ம் ஆண்டு பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய ஆண்கள் கூடைபந்தாட்டப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 27 முதல் 31ம் தேதி வரை நடைபெறுகின்றது.

கடந்த 52 ஆண்டுகளாக பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியை கோவையில் நடத்தி வருகிறது. இவ்வாண்டு 53-வது பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் வரும் ஆகஸ்டு 27 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பிஎஸ்ஜி டெக் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

இந்திய அளவில் புகழ்பெற்ற இந்த போட்டியில் பங்கு பெற்று விளையாட எல்லா அணிகளும் ஆர்வமாக இருப்பார்கள். அகில இந்திய அளவில் மிகச்சிறந்த 8 ஆண்கள் அணி தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் முன்று நாட்கள் சூழல் முறையிலும். பின்பு நாக்கவுட் முறையிலும் போட்டிகள் நடைபெறும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் அறையிறுதிக்கு தகுதி பெறும் அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டியில் விளையாடுவார்கள்.

5 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசு ரூ. 1,00,000 மற்றும் (பிஎஸ்ஜி சுழல் கோப்பை). இரண்டாமிடம் ரூ.50,000, முன்றாம் இடம் ரூ.25,000, நான்காம் இடம் ரூ.15,000, சிறந்த விளையாட்டு வீரர்க்கான பரிசாக ரூ.10.000 வழங்கப்படும்.

ஆகஸ்ட் 27 மாலை 5 மணியளவில் துவங்கும் இப்போட்டிகளை பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவரும், பி.எஸ்ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி முதல்வருமான ருத்ரமூர்த்தி துவக்கி வைக்கிறார். போட்டிகள் 27 ஆம் தேதியில் இருந்து தினமும் மாலை 5 மணிக்கு துவங்கி 4 போட்டிகள் நடைபெறும். ஆகஸ்டு 31 ஆம் தேதி பிஎஸ்ஜி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.கோபால கிருஷ்ணன் தலைமையில் நடைபெறும்.

இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில் சிஆர்ஐ பம்ப், நிறுவனங்களின் இணை நிர்வாக இயக்குனர் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவருமான ஜி. செல்வராஜ், பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ருத்ரமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவரும் எஸ்.என்.ஆர் நிறுவனங்களின் இணை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி வாழ்த்துவார்கள்.

Newsletter