இலங்கையில் நடைபெற்ற ஜு தோகு ஹாய் கராத்தே போட்டியில் கோவை மாணவர்கள் அசத்தல்

ஜு தோகு ஹாய் கராத்தே சார்பில் 2017ம் ஆண்டிற்கான சர்வதேச கருத்தரங்கு மற்றும் சாம்பியன்ஷிப் போட்டிகள் இலங்கையில் 11ம் முதல் 14ம் தேதி வரை ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கோவை ஜு தோகு ஹாய் கராத்தே பள்ளி சார்பில் 10 மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜப்பான் ஜு தோகு ஹாய் டூ கராத்தே தலைமை பயிற்சியாளர் சென்சாய் டோமோமி கிஷி பங்கேற்றார்.

இதில், இந்தியா, இலங்கை, ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், ஹாங் ஹாங் உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து தலைமைப் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் மறுசீரமைப்பாளராக சென்சாய் டி.அறிவழகன், சென்சாய் எஸ்.மோகன், சென்சாய் ஆர்.கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் போட்டியில் வெற்றி பெறுவதற்கு வழிவகுத்தனர்.

போட்டியில், கோவையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் தருணிஷ், யுவன், ரிசாந்த், தாரூவ், ஹரிஹரன், சபரிஷ் எஸ்.ராஜ், பிரகதீஷ் ராஜா, மலர்கொடி, கிருஷக்திகா, கிருஷ்ணவேணி ஆகியோர் 8 வயது முதல் 17 வயது வரையும், 18 வயதிற்கு மேற்பட்டோரென போட்டியில் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு ஐந்து தங்கப்பதக்கம், 13 வெள்ளிப்பதக்கம் மற்றும் 1 வெண்கலப்பதக்கம் என மொத்தம் 19 பதக்கங்களை வென்று குவித்தனர்.

Newsletter