தென்னிந்திய அளவில் 17 அணிகள் பங்கேற்கும் கால்பந்து போட்டி ஆக,.18-யில் கோவையில் துவக்கம்

இரு மாநிலங்களுக்கு இடையில் நடைபெறும் தென்னிந்திய அளவிலான வெர்டினன்ஸ் கால்பந்து போட்டியின் மூன்றாவது பதிப்பு கோவை, மதுக்கரையில் வரும் ஆகஸ்ட் 18 முதல் 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, இதன் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், இந்தப் போட்டியில் நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஈடுபடுவர். குறிப்பாக கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுத் துறையினை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்படவுள்ளது என்றார்.



மதுக்கரை கால்பந்துக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான குணசேகரன் கூறுகையில், வருடா வருடம், தென்னிந்தியாவில் இருந்து போட்டிகள் நடத்தப்படும். இந்த ஆண்டு கேரளா மற்றும் தமிழ்நாட்டு அணிகளிடையே போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஏசிசி கால்பந்து மன்றத்தின் இப்போட்டிகள் நாக் அவுட் அடிப்படையில் நடைபெறும். இறுதி ஞாயிற்றுக்கிழமை (20 ஆகஸ்ட்) இது நடைபெறும்.



இதில் வெற்றி பெரும் அணிக்கும், இரண்டாம் நிலையில் வெற்றி பெரும் அணிக்கும் கோப்பைகள் வழங்கப்படும். மேலும், இதில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்படும்' என்றார்.

கோவை மாவட்ட கால்பந்து வீரர்கள் சங்கத்தின் அங்கத்தினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள பதினொரு வீரர்களை உள்ளடக்கிய சில போட்டிகளில் இந்த போட்டிகள் ஒன்றாகும்.

Newsletter