தேசிய அளவிலான ஜே.கே.டயர் யூரோ 17 கார் பந்தையத்தில் தமிழக வீரர் முன்னிலை


பெடரேசன் ஆப் மோட்டர் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆப் இந்தியா தேசிய அளவிலான ஜே.கே.டயர் யூரோ 17 கார் பந்தய போட்டிகளில் சென்னை வீரர் விஷ்ணுபிரசாத் முன்னிலையில் உள்ளார். ஹைதராபாத் வீரர் அனிந்தித் ரெட்டி ஒரு புள்ளிகள் பின் தங்கி 2-வது இடத்தில் உள்ளார்.

கோவை ஜே.கே.டயர்ஸ் சார்பில் கரி மோட்டர் ஸ்பீடு வே மைதானத்தில் தேசிய அளவிலான கார் மற்றும் சுசுகி ஜிக்சர் இருசக்கர வாகன போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் நாட்டின் தலை சிறந்த ஓட்டுனர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.



காலை துவங்கி மாலை வரை கார் பந்தையமும் இருசக்கர வாகன போட்டிகளும் நடைபெற்றது. கடந்த மாதம் முதல் சுற்று போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் 2வது சுற்று போட்டிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. 

இதில் சென்னை வீரர் விஷ்ணுபிரசாத் ,யூரோ ஜே.கே. 17 இரண்டாவது சுற்று போட்டிகளின் புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகிக்கிறார். இதேப் போல் சென்னை வீரர் ஜோசப் மேத்யூ பங்கேற்ற சுசூகி ஜிக்சர் கப் போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறார்.



ரெட் புல் ரூக்கி கப் போட்டிகளில் இலங்கை வீரர் ஜடேன் குணவர்தனே சிறப்பாக ஓட்டி வெற்றி பெற்றும் தகுதி அடிப்படையில் தேர்வாகாத நிலையில் ஆய்ஸ்வால்ஸ் லால்ஹ்ரூசெய்லா 38 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். 

எல்.ஜி.பி.பார்முலா 4 கார் பந்தையத்தில் முதல் சுற்றில் முன்னிலை வகித்த சிட்டேஷ் மண்டோடி பெனால்டி காரணமாக 30 விநாடிகள் பின் தள்ளப்பட்டதால் 15-வது இடத்தில் உள்ளார். டார்க் டான் அணி வீரர் சந்தீப்குமார் முதலிடத்தையும், சென்னை வீரர் விஷ்ணுபிரசாத் 2வது இடத்தையும், ராகுல் ரங்கசாமி 3வது இடத்தையும் பிடித்தனர்.

இரண்டாவது சுற்று போட்டிகளிலும் டார்க் டான் அணி வீரர் தில்ஜித் தகுதி சுற்றை இழந்ததால் சென்னை வீரர் விஷ்ணுபிரசாத் அதிர்ஷடவசமாக முதல் இடத்தையும், ராகுல் ரங்கசாமி இரண்டாவது இடத்தையும் கெவின் பெரேரே 3-வது இடத்தையும் பிடித்தனர்.

போட்டிகளுக்கு பின்னர் பேட்டி அளித்த சென்னை வீரர் விஷ்ணுபிரசாத் கூறும்போது, யூரோ ஜே.கே.போட்டிகளில் 1 புள்ளிகள் முன்னிலையில் உள்ளேன். இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். இப்போட்டிகளில் அனிந்தித் ரெட்டி மற்றும் மும்பை வீரர் நயன் சட்டர்ஜீ ஆகியோர் தனக்கு கடும் சவாலாக இருந்தனர். பல்வேறு தருணங்களில் தன்னை முந்தி சென்றாலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டதால் வெற்றி பெற முடிந்தது" என தெரிவித்தார்.

Newsletter