குன்னூர் ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 129-வது ஆண்டு விழா கொண்டாட்டம்

குன்னூரில் செயல்பட்டு வரும் ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று 129-வது ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், வெலிங்டன் மிலிட்டரி மருத்துவமனை கமான்டன்ட் பங்கஜ் ராவ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

முன்னதாக, பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று பேசினார். இதில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் அதிகப்படியான பரிசுகளை வென்ற அசாத், காந்தி மற்றும் பிரசாத் ஆகியோரையும், இப்போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற மாரத்தான் மற்றும் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் மாணவர் ஸ்ரீ கிரன் புதிய சாதனை படைத்ததையும் பாராட்டினார்.

Newsletter