தேசிய அளவிலான ரேலி ஆப் கோயமுத்தூர் 2017 மோட்டர் சைக்கிள் பந்தையம் ஜூலை 8 அன்று துவக்கம்


தேசிய அளவிலான ரேலி ஆப் கோயமுத்தூர் 2017 மோட்டர் சைக்கிள் பந்தையம் வரும் ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெறவுள்ளது.

கோயமுத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் எம்.ஆர்.எப் டயர்ஸ் சார்பில் 2017-ம் ஆண்டிற்கான தேசிய அளவிலான மோட்டர் சைக்கிள் பந்தையம் பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரில் ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பந்தய சாலையில் உள்ள தனியார் கிளப்பில் இன்று நடைபெற்றது. அப்போது, இந்த போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கையில், பந்தயத்தின் மொத்த தூரம் 117.58 கிலோ மீட்டர். இரு பந்தய பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது. 

இப்போட்டிகளில் 50-க்கும் மேற்பட்ட பந்தய வீர்ர்கள் பங்கேற்க உள்ளனர். போட்டியாளர்களின் வாகன திறன் மற்றும் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது தவிர பந்தையத்தில் கலந்து கொள்ளும் தமிழக பைக் ரேஸ் வீரர்களுக்காக “ஸ்டார் ஆப் தமிழ்நாடு” என தனிபிரிவில் போட்டி நடத்தப்பட உள்ளது. போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனம் மற்றும் வெளிநாட்டு வாகனங்களை பயன்படுத்துவர். இந்த பைக் ரேஸ் நடைபெற உள்ள பகுதிகளில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக அவசர உதவிகளை வழங்க வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.

Newsletter