இங்கிலாந்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் பங்கேற்கும் கோவை மாணவர்

ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 19 வயதிற்கு உட்பட்டோர் கிரிக்கெட் போட்டியில் கோவையைச் சேர்ந்த வீரர் ராதாகிருஷ்ணன் இந்திய அணிக்காக விளையாடவுள்ளார்.

இவரது தந்தை சுந்தரராமன். யார்ன் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ராதாகிருஷ்ணன் பாரதிய வித்யா பவன் பள்ளியில் தற்போது நடைபெற்று முடிந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். 

5 வயது முதல் கிரிக்கெட் விளையாடி வரும் ராதாகிருஷ்ணன் 8 வயதில் ஸ்ரீ இராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட் அகாடமியில் சேர்ந்து பயிற்சியாளர் குருசாமியின் வழிகாட்டுதலின்படி விளையாடி வந்துள்ளார். முன்னணி வீரராக களமிரங்கும் இவர், சுழற்பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர்.

தமிழ்நாடு அளவில் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் விளையாடியுள்ள இவர் சராசரியாக 50 முதல் 60 ரன்கள் வரை எடுக்கும் திரன்கொண்டவராக செயல்பட்டு வந்தார். தற்போது, தனது விளையாட்டுத் திறனை மேம்படுத்தியுள்ள ராதாகிருஷ்ணன் அதிகப்படியான ரன்களை எட்டும் நிலை அடைந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெரும் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக தேர்வு பெற்றுள்ளார்.

இங்கிலாந்தில் 2 தேர்வு முறை கிரிக்கெட், 5 ஒரு நாட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக இவர் பெங்களூரில் உள்ள நேசனல் கிரிக்கெட் அகாடமில் 4ம் பிரிவில் பயிற்சி பெறவுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி தமிழகத்திற்கு பெருமை சேர்க்க கோவை மாணவரான ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

Newsletter