16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் 3-ம் நாள் நடைபெற்ற போட்டி முடிவுகள்

தமிழ்நாடு கூடைப்பந்து கழகமும், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகமும் இணைந்து மாநில அளவிலான “தமிழ்நாடு மாநில கூடைப்பந்து சேம்பியன்ஷிப் - 16” என்ற பெயரில் 16 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகின்றன. வரும் 18.06.2017- ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த போட்டிகள் பி.எஸ்.ஜி. கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கூடைப்பந்து உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஆண்கள் பிரிவில் 26 மாவட்டங்களை சேர்ந்த 27 அணிகளும், பெண்கள் பிரிவில் 17 மாவட்டங்களை சேர்ந்த 18 பெண்கள் அணிகளும் கலந்து கொள்கின்றன.

இந்த போட்டிகளை அரைஸ் பவுன்டேஷன் மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனமும் பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து நடத்துகிறது. 



இன்று (16.06.2017) நடைபெற்ற ஆண்கள் பிரிவு முதல் போட்டியில் மதுரை மாவட்ட அணியும் தஞ்சாவூர் மாவட்ட அணியும் விளையாடியது. இதில் மதுரை மாவட்ட அணி 57 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது (ராக்கி பாண்டியன் 15, சங்கீத் குமார் 13 புள்ளிகள்). எதிர்த்து விளையாடிய தஞ்சை மாவட்ட அணி 44 புள்ளிகள் எடுத்தது தோல்வியடைந்தது (ராகுல் 16, கேசவ் 13). இரண்டாவது போட்டியில் சேலம் மாவட்ட அணியும் வேலூர் மாவட்ட அணியும் விளையாடியது.

இதில் சேலம் மாவட்ட அணி 44 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது (தேவசாஸ்தா 17). எதிர்த்து விளையாடிய வேலூர் மாவட்ட அணி 22 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது.



மூன்றாவது போட்டியில் தேனி மாவட்ட அணியும் சிவகங்கை மாவட்ட அணியும் விளையாடியது. இதில் தேனி மாவட்ட அணி 47 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது (தினேஷ்குமார் 19). எதிர்த்து விளையாடிய சிவகங்கை மாவட்ட அணி 26 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது (ராஜ்குமார் 12).

நான்காவது போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அணியும் விருதுநகர் மாவட்ட அணியும் விளையாடியது. இதில் திண்டுக்கல் மாவட்ட அணி 67 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது (பத்மராஜ் 17, சல்மான் ரிஜிவி 16). எதிர்த்து விளையாடிய விருதுநகர் மாவட்ட அணி 47 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது (நவீன் பிரசாத் 21, ஆதித்யன் 14).

ஐந்தாவது போட்டியில் நாகை மாவட்ட அணியும் கரூர் மாவட்ட அணியும் விளையாடியது. இதில் நாகை மாவட்ட அணி 56 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது (பிரகாஷ் ராஜன் 17). எதிர்த்து விளையாடிய கரூர் மாவட்ட அணி 40 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது (சரவணன் 12).



பெண்கள் பிரிவு முதல் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணியும் தஞ்சாவூர் மாவட்ட அணியும் விளையாடியது. இதில் தூத்துக்குடி மாவட்ட அணி 67 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது (மனிஷா 15). எதிர்த்து விளையாடிய தங்சாவூர் மாவட்ட அணி 49 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது (மோனிகா ஜெயசீலி).

இரண்டாவது போட்டியில் கோவை மாவட்ட அணியும் நாகை மாவட்ட அணியும் விளையாடியது. இதில் கோவை மாவட்ட அணி 59 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது (இந்திரா தீபா குமாரி 14, தீபா தர்ஷினி 17). எதிர்த்து விளையாடிய நாகை மாவட்ட அணி 19 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது (புஷ்பா 17).



மூன்றாவது போட்டியில் சென்னை மண்டலம் 1 அணியும் சேலம் மாவட்ட அணியும் விளையாடியது. இதில் சென்னை மண்டலம் 1 அணி 72 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது (வர்ஷ் 21). எதிர்த்து விளையாடிய சேலம் மாவட்ட அணி 69 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது (ஸ்ரீவர்ஷினி 19).

Newsletter