பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி துவக்கம்

தமிழ்நாடு கூடைப்பந்து அசோசியேஷன் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து ஆசோசியேஷன் இணைந்து நடத்தும் 16 வயதிற்கு உட்பட்டோருக்கான கூடைப்பந்து சேம்பியன்ஸ்சிப் போட்டி பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் புதனன்று துவங்கியது. 

பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் அமைந்துள்ள உள்விளையாட்டு அரங்கில் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 26 மாவட்டங்களில் இருந்து 27 மாணவர் அணிகளும், 17 மாவட்டத்தில் இருந்து 18 மாணவியர்கள் அணியும் பங்கேற்றுள்ளன.



ஜுன் 14ம் தேதின்று துவங்கிய இந்த மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியின் இறுதிப் போட்டி வரும் 18ம் தேதியன்று நடத்தப்பட்டு அன்றைய தினமே வெற்றி பெற்றோர்களுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில், ஆர்யாஸ் பவுன்டேஷன் தலைவர் ஆதவா அர்ஜூன், கோவை மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன் தலைவர் ஜி.செல்வராஜ், பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் ஆர்.ருத்ரமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.

மாநில அளவிலான இந்த கூடைப்பந்து போட்டியினை ஆர்யாஸ் பவுன்டேஷன், சிஆர்ஐ பம்ஸ் மற்றும் பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியோர் இணைந்து ஒருங்கிணைத்து நடத்தவுள்ளனர்.

Newsletter