குமரகுரு கல்லூரி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான வுஷு சேம்பியன்ஷிப் போட்டி நிறைவு

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குமரகுரு கல்லூரியின் சார்பில் 14-வது மாநில ஜூனியர் மற்றும் சீனியர் வுஷு சேம்பியன்ஷிப் போட்டி தமிழ்நாடு வுஷு அசோசியேசன், கோவை மாவட்ட வுஷு அசோசியேஷன் மற்றும் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தியது.

ஜூன் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த போட்டியினை இணை அறங்காவலர் ஷங்கர் வானவராயர் தொடங்கிவைத்தார்.



இதில், ஆண்கள் 275 பேரும், பெண்கள் 75 பேரும் என மொத்தம் 350 பங்கேற்பாளர்கள் தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் இருந்து பங்கு பெற்றனர். மான்கன் ஜூனியர், கியான்ஷு சீனியர், சானுவன் ஜூனியர், குன்ஷு சீனியர், சன்ஷோ (48 கிலோ சிறுவர்கள்), 65 கிலோக்கு கீழே சீனியர், சீனியர் பெண்கள் மற்றும் 52 கிலோவுக்கு கீழான ஜூனியர் பெண்கள் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு பெறுவோர் தேசிய அளவிலான போட்டிக்கான தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் விநியோகிக்கப்பட்டன. இதில், முதல் பரிசார தங்க பதக்கம் மற்றும் சான்றிதழும், இரண்டாவது பரிசாக வெள்ளி பதக்கம் மற்றும் சான்றிதழும், மற்றும் மூன்றாம் பரிசாக வெண்கல பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

Newsletter