வழக்கறிஞர்களுக்கான மாநில அளவிலான கபாடி போட்டிகள் இன்று துவக்கம்

கோவை நேரு விளையாட்டரங்கத்தில் வழக்கறிஞர்களுக்கான மாநில அளவிலான கபாடி போட்டிகள் இன்று துவங்கின. இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 12 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் அடிப்படையில் நடத்தப்படும் கபாடி போட்டிகளில் அதிக புள்ளிகள் பெறும் 4 அணிகள் அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட உள்ளன. இதையடுத்து நடக்கும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட உள்ளன.



Newsletter