பெண்களுக்கான 16வது சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பையை தென் மத்திய இரயில்வே அணியும் ஆண்களுக்கான நாச்சிமுத்து கவுண்டர் கோப்பையை இந்தியன் ஓவர்ஸீஸ் கைப்பற்றியது


அகில இந்திய அளவில் முன்னணி அணிகள் பங்கேற்ற 52வது ஆண்டு ஆண்கள் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை,மற்றும் 16ம் ஆண்டு பெண்கள் பங்கேற்கும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் வ.உ.சி. பூங்கா மாநகராட்சி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. பெண்கள் பிரிவு இறுதி போட்டியில் சத்தீஸ்கர் மாநில அணியை எதிர்த்து - செகந்திராபாத் - தென் மத்திய இரயில்வே அணி விளையாடியது. இதில் தென் மத்திய இரயில்வே அணி 83-57 என்ற  à®ªà¯à®³à¯à®³à®¿à®•ள் பெற்று 16வது சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பையை கைப்பற்றியது. 



ஆண்களுக்கான 52வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பைகான போட்டியில் இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி அணியை எதிர்த்து வருமான வரிதுறை அணி விளையாடியது.இதில் இந்தியன் ஓவர்ஸீஸ் அணி 82-72 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.பெண்கள் பிரிவில் முதல் இடம் பிடித்த தென் மத்திய ரயில்வே அணிக்கு சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சுழல் கோப்பையும் 50 ஆயிரம் பரிசு தொகையும் வழங்கபட்டது. 2ம் இடம் பிடித்த சட்டீஸ்கர் அணிக்கு 25ஆயிரம் ரூபாய் மற்றும் சுழல் கோப்பையும் வழங்கபட்டது. அரை இறுதி போட்டியில் வெற்றி பெற தவறிய கேரள மாநில மின்வாரிய அணி மற்றும் கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கபட்டது. சிறந்த நம்பிக்கையான விளையாட்டு வீராங்கனைக்கான விருது சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மேகா சிங்கிற்கு வழங்கபட்டது. ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற அணிக்கு 1லட்சம் ரூபாய் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழல் கோப்பையும் 2ம் இடம் பிடித்த அணிக்கு 50 ஆயிரம் மற்றும் டாக்டர்.என்.மகாலிங்கம் கோப்பையும் வழங்கபட்டது. அரை இறுதி போட்டியில் வெற்றி பெற தவறிய டெல்லி இந்தியன் ரயில்வே மற்றும் டெல்லி இந்திய விமான படை அணிகளுக்கு  à®¤à®²à®¾ 15 ஆயிரமும் பரிசாக வழங்கபட்டது.மேலும் நன்னடத்தைகான ரேணுகா ராமநாதம் நினைவு விருது  à®‡à®¨à¯à®¤à®¿à®¯ விமான படை அணிக்கு வழங்கபட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு மாநகராட்சி ஆனையரும் தனி அலுவலருமான விஜய கார்திகேயன் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கூடைபந்து கழக தலைவர் ராஜ் சத்யன்,சக்தி குழுமங்களின் தலைவர் மாணிக்கம் கோவை மாவட்ட கூடைப்ந்து கழக தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter