மாவட்ட அளவிலான கூடைப்பந்து சேம்பியன்ஷிப் போட்டிக்கு விளையாட்டு வீரர்கள் தேர்வு

மாவட்ட அளவிலான கூடைப்பந்து சேம்பியன்ஷிப் போட்டியின் 16 வயதிற்கு உட்பட்ட பிரிவிற்கு ஆண், பெண் என இருபாலர் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்தத் தேர்வு வரும் ஜூன் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை கோவையில் நடைபெறவுள்ளது.

முன்னதாக, வரும் ஜூன் 8ம் தேதியன்று கோவை வஉசி கூடைப்பந்து மைதானத்தில் மாலை 4.30 மணியளவில் பயிற்சித் தேர்வு நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்கும் கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் 2001 ஜனவரி 1ம் தேதிக்குப் பிறகு பிறந்திருத்தல் அவசியம் என கோவை மாவட்ட கூடைப்பந்து அசோசியேசன் சார்பில் அதன் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter