நாச்சிமுத்து கவுண்டர் கூடைப்பந்து போட்டியின் அரை இறுதியில் வருமான வரி அணியை எதிர்த்து விளையாடும் இந்திய இரயில்வே அணி

கோவையில் நாச்சிமுத்து கவுண்டர் மற்றும் சிஆர்ஐ பம்ப்ஸ் டிராபி இணைந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என சர்வதேச கூடைப்பந்து போட்டியினை கடந்த மே 26ம் தேதி முதல் நடத்தி வருகின்றன. 



முதல் போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை எதிர்த்து இந்தியன் இரயில்வே அணி விளையாடியது. இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 71 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இதன் வீரர்கள் பிரதாம் சிங் 14 புள்ளி, ஹரிஷ் கோரத் 12 புள்ளி, சிவ பாலன் 10 புள்ளிகள் எடுத்தனர். எதிர்த்து விளையாடிய இந்தியன் இரயில்வே அணி 52 புள்ளிகள் பெற்றது. இதன் வீரர் சோம்வீர் 11 புள்ளிகள் எடுத்தார். 

இரண்டாவது போட்டியில் வருமானவரி அணியை எதிர்த்து இந்திய விமானப்படை அணி விளையாடியது. இதில் வருமான வரி அணி 79 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இதன் வீரர்கள் பிதானி 34 புள்ளி, அகில் 14 புள்ளி, ராம்கும் 12 புள்ளிகள் எடுத்தனர். எதிர்த்து விளையாடிய இந்திய விமானப்படை அணி 69 புள்ளிகள் எடுத்தது. இதன் வீரர்கள் நிகில் 22 புள்ளி, அசுதோஷ்ராய் 10 புள்ளிகள் எடுத்தனர். 



16-வது சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை பெண்கள் பிரிவு முதல் போட்டியில் வடக்கு பிரண்டிர் இரயில்வே அணியை எதிர்த்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் வடக்கு பிரண்டிர் இரயில்வே அணி 75 புள்ளிகள் பெற்று பெற்றது. இதன் வீரங்கனைகள் கீதா 21 புள்ளி, நிகரிக்கா வெர்மா 20 புள்ளி  à®Žà®Ÿà¯à®¤à¯à®¤à®©à®°à¯. எதிர்த்து விளையாடிய கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி 70 புள்ளிகள் எடுத்தனர். இதன் வீராங்களைகள் ஓசின் நவீந்திரன் 22 புள்ளி, பவித்ரா 15 புள்ளி, நிசி மரியம் குஞ்சுமோன் 13 புள்ளிகள் எடுத்தனர். 



இரண்டாவது போட்டியில் கேரள மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து சத்தீஸ்கர் மாநில அணி விளையாடியது. இதில் கேரளா மாநில மின்சார வாரிய அணி 43 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இதன் வீராங்கனைகள் நிம்மி மேத்யூ 13 புள்ளி, நிம்மி ஜார்ஜ் 11 புள்ளிகள் எடுத்தனர். எதிர்த்து விளையாடிய சத்தீஸ்கர் மாநில அணி 39 புள்ளிகள் எடுத்தது. இதன் வீராங்கனை நிஷா நீதம் 11 புள்ளிகள் எடுத்தார். 

மூன்றாவது போட்டியில் தென் மத்திய இரயில்வே அணியை எதிர்த்து கிழக்கு இரயில்வே அணி விளையாடியது. இதில் கிழக்கு இரயில்வே அணியை 80 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய தென் மத்திய இரயில்வே அணி 77 புள்ளிகள் எடுத்தது. 

இதனைத் தொடர்ந்து, இன்று (மே 30) நடைபெறும் 52-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆண்கள் அரை இறுதிப் போட்டியில் முதல் போட்டியில் வருமான வரி அணியை எதிர்த்து இந்திய இரயில்வே அணி விளையாடுகிறது. இரண்டாவது போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை எதிர்த்து இந்திய விமானப்படை அணி விளையாடுகிறது.

16-வது சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை பெண்கள் அணியின் அரை இறுதி முதல் போட்டியில் கேரளா மாநில அணியை எதிர்த்து கிழக்கு இரயில்வே அணி விளையாடுகிறது. இரண்டாவது போட்டியில் சத்தீஸ்கர் மாநில அணியை எதிர்த்து தென் மத்திய இரயில்வே அணி விளையாடுகிறது.

Newsletter