நாச்சிமுத்து கவுண்டர் சர்வதேச கூடைப்பந்து போட்டியின் இரண்டாம் அமர்வில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி வெற்றி

கோவையில் நாச்சிமுத்து கவுண்டர் மற்றும் சிஆர்ஐ பம்ப்ஸ் டிராபியும் இணைந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என சர்வதேச கூடைப்பந்து போட்டியினை கடந்த மே 26ம் தேதி முதல் நடத்தி வருகின்றன. 

மே 26ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும இந்த போட்டியின் இரண்டாவது நாள் அமர்வில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை எதிர்த்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 89 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இதன் வீரர்கள் சதீஷ் குமார் 17 புள்ளிகள், ஜீவானந்தம், பிரசன்ன வெங்கடேஷ் தலா 16 புள்ளிகள், வினித் ரவி மேம்யூ 13 புள்ளிகள் எடுத்தனர். எதிர்த்து விளையாடிய கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி 55 புள்ளிகள் பெற்றது. இதன் வீரர் வினித் குமார் 14 புள்ளிகள் எடுத்தார்.



அதனைத் தொடர்ந்து, இரண்டாவது போட்டியில் தென் மத்திய இரயில்வே அணியை எதிர்த்து தென்னக இரயில்வே அணி விளையாடியது. இதில் தென் மத்திய இரயில்வே அணி 74 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இதன் வீராங்கனைகள் ஆர்.ரம்யா 24 புள்ளிகள், அஸ்வதி தம்பி  16 புள்ளிகள், எம்.காயத்திரி 12 புள்ளிகள், எல்.சுகன்யா 11 புள்ளிகள் எடுத்தனர். எதிர்த்து விளையாடிய தென்னக இரயில்வே அணி 60 புள்ளிகள் எடுத்தனர். இதன் வீராங்கனைகள் வி.ஸ்ரீவித்யா 16 புள்ளிகள், ரஞ்சினி பீட்டர் 12 புள்ளிகள் எடுத்தனர். 



முன்னதாக, கோவை வஉசி மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு கூடைப்பந்து அசோசியேஷன் தலைவர் வி.வி.ஆர்.ராஜ் சத்யன் சிறப்புரையாற்றினார். சக்தி குரூப் ஆப் கம்பெனிஸ் தலைவர் எம்.மாணிக்கம், கோவை மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன் தலைவர் ஜி.செல்வராஜ், சிஆர்ஐ பம்ப்ஸ் துணை மேலாண்மை இயக்குநர் இப்போட்டியினை ஒருங்கிணைத்து இப்போட்டியினை நடத்தி வருகின்றனர்.

Newsletter