குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் டாக்டர்.நா.மகாலிங்கம் செஸ் அகாடமி பயிற்சி முகாம்

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், டாக்டர். நா. மகாலிங்கம் செஸ் அகாடமியில் ஆரம்ப நிலை செஸ் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், பல்வேறு பள்ளிகளில் இருந்து 30 மாணவ மாணவியர் செஸ் முகாமில் பங்கு பெற்றனர்.



இது கொங்கு மண்டலத்தில் இருந்து தேசிய மற்றும் சர்வதேச செஸ் வீரர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்குவதற்கான முயற்சியாகும். பயிற்சியாளர் முகமத் யூசுஃப், பல்வேறு தேசிய செஸ் வீரர்களை உருவாக்கியவர் ஆவார். சிடிசிஏ-இன் இணை செயலாளராகவும் உள்ளார்.

முகாமை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் இணை தாளாளர் மற்றும் தலைவர் ஸ்ரீ ஷங்கர் வானவராயர், டாக்டர் நா. மகாலிங்கம் செஸ் அகாடமி மற்றும் முனைவர் ஆர்.எஸ். குமார் ஆகியோர் தலைமை தாங்கி சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினர்.

Newsletter