கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பிரிமிட்டிவ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பயிற்சி முகாம்

சிறுவர் சிறுமியர் இடையே கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் அகில இந்திய கால்பந்து கழகம், ஆசிய கால்பந்து கழகத்துடன் இனைந்து பிரிமிட்டிவ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பயிற்சி முகாம் நாளை கோவையில் நடைபெறுகிறது.

கால்பந்து விளையாட்டை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் வகையில் அகில இந்திய கால்பந்து கழகம், ஆசிய கால்பந்து கழகத்துடன் இனைந்து பிரிமிட்டிவ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பயிற்சி முகாம் நாளை வித்ய நிகேத்தன் பள்ளி மைதானத்தில் நாளை மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடக்கிறது. இது தொடர்பான பத்திரிக்கையாலர் சந்திப்பு இன்று நடைபெற்றது. 

இது குறித்து பிரிமிட்டிவ் ஸ்போர்ட்ஸ் கிளப் முதன்மை அதிகாரி கார்த்தி ரங்கநாதன் கூறும்போது; தற்போது கால்பந்து விளையாட்டு அதிக அளவில் மாணவர்களை கவர்ந்து வருவதாகவும் அதில் திறன் வாய்ந்த வீர்ர்களை கண்டறியும் விதமாகவும் கால்பந்து விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த பயிற்சி முகாம் நடத்தபடுவதாக தெரிவித்தார். 4 வயது முதல் 16 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்த பயிற்சி முகாமில் 300கும் மேற்பட்டோர் இந்த முகாமில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்பதாக தெரிவித்தவர். இந்த பயிற்சி முகாமில் அதிக அளவில் பெண்கள் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

தமிழகத்தில் சென்னை,கோவை உட்பட 3 நகரங்களில் இந்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாகவும் இந்தியா முழுவதும் 70 இடங்களில் இந்த பயிற்சி முகாம் நடத்தபடவுள்ளதாக தெரிவித்தார். இந்த பயிற்சி முகாமில் ஆர்பமுள்ள வீரர்களை அடையாளம் காணும் விதமாக இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி இயன்முறை மருத்துவர் அவினாஷ் ஜெய்ஸ்வால் மற்றும் 16 வயதிற்கு உட்பட்டோருக்கான முன்னாள் மேலாளர் ஷைலேஷ் கார்கேரா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார். மேலும் மாற்று திறனாளிகள் கால்பந்து விளையாட உண்டான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் வரும் காலங்களில் சிறந்த கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கும் நோக்கிலேயே பயிற்சி முகாம்கள் நடத்தபடுவதாக கூறினார்.

Newsletter