14-வது கொஜு ரையு சர்வதேச கராத்தே போட்டியில் கோவை மாணவர்கள் சாதனை

14-வது கொஜு ரையு (GOJU RYU) சர்வதேச கராத்தே சேம்பியன்ஸ்சிப் போட்டி மலேசியாவில் உள்ள பெரக்கில் நடைபெற்றது. இதில், அட்வன்சர் அகாடமி (கிடோ குகாய்) மற்றும் ரெட் டிராகன் கிளப் ஆகியவற்றின் மாணவர்கள் பங்கேற்றனர்.



இந்த கராத்தே போட்டியில் இந்தியா உட்பட இலங்கை, நேபால், மலேசியா, சிங்கப்பூர், சீனா, பிரான்ஸ், மியான்மர், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சுமார் 18 மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

இந்தியாவில் இருந்து அட்வன்சர் அகாடமி மற்றும் ரெட் டிராகன் கிளப்-யின் அறிவழகன் (ஆசியன் கராத்தே ஃபெடரேஷன் நடுவர்) மற்றும் எஸ்.மோகன் (இந்திய கராத்தே அசோசியேஷன் பயிற்சியாளர்) ஆகியோர் தங்களது மாணவர்களுடன் பங்கேற்றனர்.



இப்போட்டியில், எஸ்.தருனேஷ், ஆர்.பூஜா ஸ்ரீ, ஆர்.பிரதக்ஷா, எம்.சாருக்கேஷ், டி.பிரனீத், ஏ.ஹரிஹரன், ஆர்.சுந்தரமூர்த்தி, ஆர்.பிரகதீஷ் ராஜா, வி.அஷோக் குமார் உள்ளிட்ட மாணவ, மாணவியர்கள் வெற்றிபெற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பரிசுகளை வென்றனர்.



இந்த சர்வதேச கரேத்தே போட்டியினை பெரக் முதலமைச்சர் ஜாம்ரிபின் ஏபிடி கடிர் பங்கேற்று கவுரவித்தார். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளையும், பதங்கங்களை அவர் வழங்கினார்.



Newsletter