சகோதரத்துவக் கோப்பைக்கான கால்பந்து மற்றும் கைப்பந்து போட்டிகள் இன்று துவக்கம்


இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பில் விளையாட்டு பிரிவான டிராக் போர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக கோவையில் "சகோதரத்துவக் கோப்பை –2017" எனும் தலைப்பில் மாபெரும் கால்பந்து மற்றும் கைப்பந்து போட்டிகள் இன்று மே 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் குனியமுத்தூர் நூர்சேட் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. போட்டியினை ஜமாஅத் இ-இஸ்லாமி ஹிந்த் மக்கள் தொடர்பு செயலாளர் அப்துல் ஹக்கீம் துவங்கி வைத்தார்.  

இதில், தமிழகத்திலிருந்து 32அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த நிகழ்வில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கமாக 38,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. இந்தநிகழ்வின் சிறப்பு விருந்தினராக கோவை காவல்துறை துணை ஆணையர் லட்சுமி மற்றும்  à®®à¯à®•்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிக்க உள்ளார். 

Newsletter