உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரியின் விளையாட்டு விழா கொண்டாட்டம்

உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2023 கல்வி ஆண்டிற்கான விளையாட்டு விழா கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்பட்டது.


திருப்பூர்: பொள்ளாச்சி ரோட்டரி கிளப் பட்டயத் தலைவர் செந்தில் காளிங்கராயர் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கி விளையாட்டு தின உரையாற்றினார்.



உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2023 கல்வி ஆண்டிற்கான விளையாட்டு விழா கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்பட்டது.

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர் பா. குமாரவேல் விழாவை தலைமையேற்று நடத்தினார். பொள்ளாச்சி ரோட்டரி கிளப் பட்டயத் தலைவர் செந்தில் காளிங்கராயர் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கி விளையாட்டு தின உரையாற்றினார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் உடற்கல்வி துறையின் ஓய்வு பெற்ற துணை இயக்குனர் முனைவர் எ.எம்.வெங்கடேசன் மற்றும் உடுமலைப்பேட்டையை சார்ந்த பூப்பந்து விளையாட்டு வீரர் ராஜமாணிக்கம் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரியின் உடற்கல்வி செயலாளர் முனைவர் ப.ரவி விளையாட்டு விழாவின் ஆண்டறிக்கையினை வாசித்தார். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உடற்கல்வி உதவி இயக்குனர் முனைவர் ப.கணேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் உதவி உடற்கல்வி செயலாளர் மருத்துவர் ச.விக்னேஷ்வரன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter