லிவோ ஸ்போர்ட்ஸ் அகாடமியின் சார்பில் மாநில அளவிலான டென்னிஸ் போட்டி

கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லிவோ ஸ்போர்ட்ஸ் அகாடமியின் சார்பில் மாநில அளவிலான டென்னிஸ் லீக் டோரனமென்ட் 2017 போட்டி நடைபெற்றது. இதில், மாநிலம் முழுவதும் இருந்து 125 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இப்போட்டியில் 10 வயதிற்கு உட்பட்ட ரெட் பால் பிரிவில் அக்ஷய் ராம் வெற்றி பெற்றார். தொடர்ந்து, 10 வயதிற்கு உட்பட்ட பிரிவில் சிவபிரசாத், 12 வயதிற்கு உட்பட்ட பிரிவில் ஜனேஷ் நந்தா, 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் விஜயராகவன், 16 வயதிற்கு உட்பட்ட பிரிவில் ஜோசிகா, ஆண்கள் தனிப்பிரிவில் அரவிந்த் அகியோர் வெற்றி பெற்றனர்.

இப்போட்டிக்கு, லிவோ ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைவர் கௌரி குருசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றிபெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுக் கோப்பைகளையும் வழங்கி கவுரவித்தார். இந்த டென்னிஸ் டோரனமென்ட் போட்டியில் லிவோ போர்ஸ்ட் அகாடமியின் பயிற்சியாளர் பொன்னுசாமி நடுவராக செயல்பட்டார்.

Newsletter