ஏ.ஜே.கே கல்லூரியில் ஆண்களுக்கான கால்பந்து போட்டி- வரும் 16, 17 தேதிகளில் நவக்கரையில் நடைபெறுகிறது

கோவையில் உள்ள ஏ.ஜே.கே., கல்லூரி சார்பில், மாவட்ட அளவில் ஆண்களுக்கான கால்பந்து போட்டி வரும் 16, 17 ஆகிய தேதிகளில் நவக்கரையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: ஏ.ஜே.கே., கல்லூரி சார்பில் நடைபெறும் கால்பந்து போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 7800 ரூபாயும், மூன்றாம் பரிசாக 5000 ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஜே.கே., கல்லூரியின் நிறுவனர் நாள் கொண்டாடத்தின் ஒரு பகுதியாக ஆண்களுக்கான ஓபன் பிரிவு கால் பந்து போட்டி, நவக்கரையில் உள்ள ஏ.ஜே. கே. டர்ப் டென் மைதானத்தில் நடக்கிறது.

இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம். இரண்டாம் பரிசாக ரூ. 7800, மூன்றாம் பரிசாக ரூ.5000 மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்படுகின்றன.

போட்டியில் பங்கேற்க விரும்புவோர், 97563 71530, 98973 07902 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter