பெரியநாயக்கன்பாளையத்தில் குடியரசு தின விழா வடக்கு குறுமைய தடகளப் போட்டி - 1000 மாணவர்கள் பங்கேற்பு

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, கோவை கல்வி மாவட்டம் மற்றும் அன்னை வைலட் மெட்ரிக் பள்ளி இணைந்து 2023-24ம் ஆண்டு 64 வது குடியரசு தின விழா வடக்கு குறுமைய தடகளப் போட்டிகள் கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜி.கே.டி.மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடத்தினர்.



கோவை: 2023-24ம் ஆண்டு 64 வது குடியரசு தின விழா வடக்கு குறுமைய தடகளப் போட்டியில் கோவை மாவட்டத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 1000 த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை கோவை கல்வி மாவட்டம் மற்றும் அன்னை வைலட் மெட்ரிக் பள்ளி இணைந்து 2023-24ம் ஆண்டு 64 வது குடியரசு தின விழா வடக்கு குறுமைய தடகளப் போட்டிகள் கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜி.கே.டி.மெட்ரிக் பள்ளி மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது.

தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இதன் துவக்க விழாவில் அன்னை வைலட் மெட்ரிக் பள்ளி முதல்வர் அன்புவடிவு அனைவரையும் வரவேற்றார்.



கோவை முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். வடக்கு குறுமையக் கொடியினை அன்னை வைலட் மெட்ரிக் பள்ளி செயலாளர் பிரேம் குமார் ஏற்றிவைத்தார்.



தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கவுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டனர்.



அதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி ஜெய்சங்கர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன், ஜி.கே.டி. பள்ளி முதல்வர் இந்திரா உள்ளிட்டோர் ஒலிம்பிக் ஜோதியினை ஏற்றி வைக்க, அதனை ஒவ்வொரு மாணவர்களாக கையில் ஏந்தி மைதானத்தை வலம் வந்து கம்பத்தில் ஏற்றினர்.

அதைத் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 2 நாட்கள் நடைபெறவுள்ள போட்டிகளில் 100 மீட்டர், 400 மீட்டர், 1000 மீட்டர், 1500 மீட்டர், 5000 மீட்டர் ஓட்டப்பந்தையங்கள், தடை தாண்டும் ஓட்டம், ரிலே, உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதில் வெற்றி பெரும் வீரர், வீராங்கணைகளுக்கு பதக்கங்களும், கோப்பைகளும் வழங்கப்படவுள்ளன. கோவை மாவட்டத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 1000 த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.

துவக்கவிழா நிகழ்ச்சியில் வைலட் மெட்ரிக் பள்ளி இணைச் செயலாளர் பிரேம்சந்த், தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அதிகாரி பெல்ராஜ், உடற்கல்வி ஆசிரியர் தனக்குமார் உள்பட ஆசிரியர், ஆசிரியைகள் பலர் பங்கேற்றனர். இறுதியில் வைலட் மெட்ரிக் பள்ளி தமிழ் ஆசிரியர் இந்துராணி நன்றி கூறினார்.

Newsletter