ஈஷா நடத்திய மண்டல அளவிலான விளையாட்டு போட்டி -‌ மேயர்‌ கல்பனா தொடங்கி வைத்தார்!‌

தென்னிந்திய அளவில்‌ நடத்தப்படும்‌ ஈஷா கிராமோத்சவம்‌ திருவிழாவின்‌ மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள்‌ கோவையில்‌ நேற்று (செப்‌.10) கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவை மாநகர மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார்‌.


கோவை: ஈஷா கிராமோத்சவம்‌ திருவிழாவின்‌ மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.

விளையாட்டு போட்டிகள்‌ மூலம்‌ கிராமப்புற மக்களின்‌ வாழ்வில்‌ புத்துணர்வை உருவாக்கும்‌ நோக்கத்துடன்‌ ஈஷா கிராமோத்சவம்‌ என்னும்‌ விளையாட்டு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்‌ முதல் கட்டமாக, கிளெஸ்டர்‌ அளவிலான போட்டிகள்‌ கடந்த மாதம்‌ நடைபெற்றது.

இதை தொடர்ந்து 2-வது கட்டமாக மண்டல அளவிலான போட்டிகள்‌ கோவையில்‌ உள்ள கொங்கு நாடு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்‌ நேற்று நடைபெற்றது. இதில்‌ சுற்றுவட்டார மாவட்டங்களில்‌ இருந்து தேர்வான வாலிபால்‌, த்ரோபால்‌ மற்றும்‌ கபடி வீரர்கள்‌ பங்கேற்றனர்‌.

போட்டியை கோவை மேயர்‌ கல்பனா தொடங்கி வைத்தார்‌. மேலும்‌, தொடக்க விழா நிகழ்வில்‌ 13-வது வார்டு கவுன்சிலர்‌ சுமதி மற்றும்‌ 14-வது கவுன்சிலர்‌ சித்ரா ஆகியோர்‌ உடன்‌ பங்கேற்றனர்‌.



இதில், ஆண்களுக்கான வாலிபால்‌ போட்டியில்‌ சூலூர்‌ அணியை வீழ்த்தி நஞ்சுண்டாபுரம்‌ அணி முதலிடம்‌ பிடித்தது. இதேபோல்‌, பெண்களுக்கான த்ரோபால்‌ போட்டியில்‌ தேவராயபுரம்‌ அணியை வீழ்த்தி புள்ளாகவுண்டன்‌ புதூர்‌ அணி முதலிடம்‌ பிடித்தது.



இதுதவிர, தமிழ்நாடு அமெச்சூர்‌ கபடி சங்கத்துடன்‌ இணைந்து நடத்தப்பட்ட கபடி போட்டியில்‌ ஆண்கள்‌ பிரில்‌ ஈரோடு மாவட்ட அணியும்‌, பெண்கள்‌ பிரிவில்‌ கரூர்‌ மாவட்ட அணியும்‌ முதலிடம்‌ பிடித்தன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு கொங்கு நாடு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியின்‌ தாளாளர்‌ திருமதி. வாசுகி அவர்கள்‌ பரிசு தொகையும்‌, பாராட்டு சான்றிதழும்‌ வழங்கி கெளரவித்தனர்‌.

மண்டல அளவில்‌ தேர்வாகியுள்ள அணிகள்‌ செப்‌.23ஆம்‌ தேதி கோவையில்‌ ஆதியோகி முன்பு பிரம்மாண்டமாக நடைபெறும்‌ இறுதி போட்டியில்‌ மோதவுள்ளன. அதில்‌ கபடியில்‌ முதலிடம்‌ பிடிக்கும்‌ ஆண்கள்‌ அணிக்கு ரூ.5 லட்சமும்‌, பெண்கள்‌ அணிக்கு ரூ.2 லட்சமும்‌ பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது.

மேலும்‌, வாலிபால்‌ போட்டியில்‌ முதலிடம்‌ பிடிக்கும்‌ அணிக்கு ரூ.5 லட்சமும்‌, த்ரோபால்‌ போட்டியில்‌ முதலிடம்‌ பிடிக்கும்‌ அணிக்கு ரூ.2 லட்சமும்‌ வழங்கப்பட உள்ளது. சத்குரு மற்றும்‌ சிறப்பு விருந்தினர்கள்‌ முன்னிலையில்‌ இப்போட்டிகள்‌ நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மசூம் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி 2023 - இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற கோவை அணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மசூம் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் கோவை அணி இறுதிப்போட்ட...

விளையாட்டை வளர்க்கும் வித்தையை சத்குருவிடம் கற்றுக் கொள்ளலாம் - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் புகழாரம்

நம் தேசத்தில் விளையாட்டு போட்டிகள் மற்றும் பாரம்பரிய கலைகளை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை சத்குருவிடம் இருந்து கற...

உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரியின் விளையாட்டு விழா கொண்டாட்டம்

உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2023 கல்வி ஆண்டிற்கான விளையாட்டு விழா கல்லூரியின...

உலக இதய தினத்தை முன்னிட்டு கோவையில் சைக்கிளத்தான் மற்றும் வாக்கத்தான் - கேஜி மருத்துவமனை ஏற்பாடு

உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்வதால் இதயத்தை பாதுகாக்கலாம் என்பதை வலியுறுத்தும் வகையில் கோவையில் கேஜி மருத்துவமனை சா...

ஆதியோகியில்‌ நாளை பிரம்மாண்டமாக நடைபெறும்‌ ஈஷா கிராமோத்சவம்‌ திருவிழா - மத்திய அமைச்சர்‌ அனுராக்‌ தாகூர்‌ பங்கேற்பு

கோவை ஆதியோகி முன்பு நாளை ஈஷா கிராமோத்சவம்‌ திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர்‌...

துடியலூரில் பூப்பந்து போட்டி - கோவை பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரி அணி வாகையர் பட்டம்

கோவை துடியலூரை அடுத்த வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு...