கோயமுத்தூர் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி..!! பார்க் கல்வி குழும மைதானத்தில் தொடக்கம்.!

கோவை பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் பார்க் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளின் கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 9 முதல் நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 32 அணிகள் பங்குகேற்றுயுள்ளன. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு 1 லட்சம் ரூபாய் வரை பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.

பார்க் கல்வி குழுமம் தனது கல்வி பணியில் பொன்விழா கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கோவை பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் பார்க் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளின் கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 9 முதல் நடைபெற்று வருகிறது.

இதில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 32 அணிகள் பங்குகேற்றுயுள்ளன. இந்தப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு 1 லட்சம் ரூபாய் வரை பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. இப்போட்டியை பார்க் கல்வி குழுமத்தின் தலைவர் Dr. P.V. ரவி மற்றும் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி தொடங்கி வைத்தனர்.

இந்த போட்டிகளின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா 24 செப்டம்பர் 2023 அன்று பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடை பெறவுள்ளது.

Newsletter