குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் முதல் மாநில அளவிலான செஸ் போட்டி


டாக்டர் மகாலிங்கம் செஸ் அகாடமி செஸ் மற்றும் சதுரங்க வீரர்களை ஊக்குவிப்பதற்காகவும், சதுரங்க வளர்ச்சியினை ஊக்குவிப்பதற்காகவும் நிறுவப்பட்டது. இந்த அகாடமியின் சார்பில் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் முதல் மாநில அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.



இதில், 200-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபெற்றனர். இந்த போட்டியில் சுவிஸ் சிஸ்டம் மூலம் ஐந்து சுற்றுகளாக நடைபெற்றது.

இதில், கோவை செஸ் சென்டர் தனசேகர் முதல் பரிசும், வின்னர் செஸ் அகாடமியின் நந்தகுமார் இரண்டாம் பரிசும் மற்றும் வின்னர் செஸ் அகாடமியின் மணி பாரதி மூன்றாம் பரிசும் பெற்றார்கள். ஆண் மற்றும் பெண் ஆகிய பிரிவுகளில் வயதின் அடிப்படையில் முதல் மூன்று இடத்தில் உள்ளவர்களுக்கு கோப்பை வழங்கப்பட்டது. மற்ற போட்டியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 



குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் வரும் மே 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை கோடை கால சிறப்பு முகாம் தொடக்க நிலை செஸ் போட்டியாளர்களுக்கு நடைபெறுகிறது. இதில், கோவை மாவட்ட செஸ் சங்க இணைச் செயலாளர் முகமத் யூசுப் பயிற்சி அளிக்க உள்ளார். இப்பயிற்சிக்கான கட்டணம் 1500 ரூபாய் ஆகும். மேலும் விபரங்களுக்கு 93443 30084 மற்றும் 99436 12375 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter