கோவையில் நடைபெறும் கால்பந்து போட்டி: கட்டு கோப்பை 2023..! முழு விவரம் அறிவிப்பு.!

கோவை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் கட்டு கோப்பை 2023, 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு நடைபெறும் போட்டிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கட்டு கோப்பைக்கான கால்பந்து போட்டியில் வெற்றிப்பெறுபவர்களுக்கு முதல் பரிசா ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட கால்பந்து சங்கம்‌ சார்பில்‌ கட்டு கோப்பை 2023, 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான, கால்பந்து போட்டி 7.09.2023, 8.09.2023 மற்றும்‌ 09.09.2023 ஆகிய தேதிகளில்‌ நடக்கிறது. மண்டல வாரியாக அணிகள்‌ பிரிக்கப்பட்டு 7.09.2023 மற்றும்‌ 8.09.2023 ஆகிய தேதிகளில்‌ நாக்‌அவுட்‌ போட்டிகள்‌ நடைபெறவுள்ளது. போட்டிகள்‌ நடைபெறும்‌ இடம்‌, தொடர்புகொள்ள வேண்டிய நபர்‌, தொலைபேசி எண்கள்‌, மண்டல பகுதி விபரம்‌ கீழே வருமாறு

Zone A பயனீர்‌ கலை அறிவியல்‌ கல்லூரி, ஜோ புரம்‌, பெரியநாயக்கன் பாளையம்‌, கோயம்புத்தூர்‌. ராஜ்மோகன்‌, 97126906 மண்டல பகுதி - மேட்டுப்பாளையம்‌, காரமடை, துடியலூர்‌, பெரியநாயக்கன்பாளையம்‌.

Zone B ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பழனி சாலை, பொள்ளாச்சி, 642107 கே.பாரதி, 9842271077- மண்டல பகுதி - கிணத்துக்கடவு, பொள்ளாச்சி.

Zone C கார்மல்‌ கார்டன்‌ மெட்ரிகுலேஷன்‌ மேல்நிலைப்‌ பள்ளி ராமநாதபுரம்‌, கோயம்புத்தூர்‌. ராஜேஸ்‌ 9790248717- மண்டல பகுதி கோயம்புத்தூர்‌ கார்ப்பரேஷன்‌ லிமிட்‌.

Zone D பிஷப்‌ அம்புரோஸ்‌ கல்லூரி, சுங்கம்‌, கோயம்புத்தூர்‌- டாக்டர்‌ வேணுகோபால்‌ 9842674734. மண்டல பகுதி கோயம்புத்தூர்‌ கார்ப்பரேஷன்‌ லிமிட்‌

பதிவு செய்ய கடைசி நாள்‌ செப்டம்பர்‌ 6ம் தேதி

இறுதி போட்டி வருகின்ற செப்டம்பர்‌ 9ம்‌ தேதி கார்மல்‌ கார்டன்‌ மெட்ரிகுலேஷன்‌ மேல்நிலைப்‌ பள்ளியில்‌ மாலை 4 மணிக்கு நடைபெறும்‌. வெற்றிப்பெறும்‌ அணிகளுக்கு முதல்‌ பரிசு ரூபாய்‌ 5000 இரண்டாம்‌ பரிசு - ரூபாய்‌ - 3000 மூன்றாம்‌ பரிசு ரூபாய்‌ - 2000 வழங்கப்படவுள்ளது. போட்டியில்‌ பங்கேற்கும்‌ அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும்‌ சான்றிதழ்‌ கொடுக்கப்படும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter