திருப்பூரில் ஒணம் பண்டிகையை முன்னிட்டு மாரத்தான் மற்றும் வாக்காத்தான் போட்டி - 2000க்கும் மேற்பட்ட மாணாக்கர் பங்கேற்பு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, திருப்பூரில் மாரத்தான் மற்றும் வாக்காத்தான் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்களது தனித்திறனை வெளிக்காட்டினர்.



திருப்பூர்: மாரத்தான் மற்றும் வாக்காத்தான் போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.



திருப்பூர் - காந்திநகர், ஏவிபி மெட்ரிக் பள்ளியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, மாரத்தான் மற்றும் வாக்காத்தான் போட்டிகள் இன்று நடைபெற்றன. மாரத்தான் போட்டிகளில் 17 வயதுக்குட்பட்ட மாணாக்கர்களும், வாக்காத்தான் போட்டியில் அனைத்து தரப்பு வயதினரும் பங்கேற்றனர்.

இந்த போட்டிகளை பள்ளி வளாகத்திலிருந்து வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினபு ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். காந்திநகரில் துவங்கி அவினாசி சாலை, அங்கேரிபாளையம் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்த வாக்காத்தான் போட்டியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட 2000 த்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கலந்து கொண்டனர்.



முடிவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ் மற்றும் மெடல் ஆகியவற்றை வழங்கினார்.

Newsletter