தொல்.திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கால்பந்து போட்டி

கோவை மாநகர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொல்.திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு வான்மதி 2 ஆம் ஆண்டு நினைவு கோப்பைக்கான ஐவர் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியம் வெளியரங்க மைதானத்தில் கடந்த 26 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற்றது‌‌.‌


கோவை: விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளன் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கால்பந்து போட்டி நேற்று நிறைவுபெற்றது. இதில் வெற்றிப்பெற்ற அணியினருக்கு அக்கட்சியின் நிர்வாகிகள் கோப்புகளை வழங்கினர்.

கோவை மாநகர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொல்.திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு வான்மதி 2 ஆம் ஆண்டு நினைவு கோப்பைக்கான ஐவர் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியம் வெளியரங்க மைதானத்தில் கடந்த 26 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற்றது‌‌.‌

இப்போட்டியில் தமிழகம் தழுவிய அளவில் 16 வயதிற்குட்பட்ட, 18 வயதினருக்கும் என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் 32 அணியினர் பங்கு பெற்றனர்‌. இந்நிகழ்ச்சியை மாநகர மாவட்டச் செயலாளர் கோவை குமணன் மற்றும் வழக்கறிஞர் சீலாராஜன் தலைமையேற்று நடத்தினர்.

இப்போட்டியை மாநில துணைப் பொது செயலாளரும், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான பாலாஜி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியின் முதல் நாள் சிறப்பு விருந்தினராக கட்சியின் மண்டல துணைசெயலாளர் வழக்கறிஞர் துரை.இளங்கோவன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இப்போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நிறைவுற்றது. இதில் 18 வயதினருக்கான முதலாம் பரிசுகோப்பையை நமது கட்சியின் முதன்மை செயலாளர் உஞ்சை.அரசன் வழங்கினார்.

18 வயதினருக்கான இரண்டாம் பரிசு கோப்பையை நமது கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் கோவை குமணன் வழங்கினார்.

மூன்றாம் பரிசுக்கோப்பையை முன்னாள் மாவட்ட செயலாளர் நிலா மணிமாறனும், நான்காம் பரிசுக்கோப்பையை முன்னாள் மண்டல செயலாளர் சுசி.கலையரசனும் வழங்கினர்.

16 வயதினருக்கான முதலாம் பரிசுக்கோப்பையை துப்புரவு தொழிலாளர் அணியின் மாநில துணைசெயலாளர் சுப்பிரமணியும், இரண்டாம் பரிசுக்கோப்பையை கிழக்கு மாவட்ட செயலாளர் ஸ்டீபன் சுந்தரும், மூன்றாம் பரிசுகோப்பையை துப்புரவு தொழிலாளர் விடுதலை முன்னணியின் செல்வமும், நான்காம் பரிசுகோப்பையை வழக்கறிஞர் பிரபாகரனும், சிறந்த வீரருக்கான விருதை சிறுத்தை மணிகண்டன், கால் டாக்ஸி செல்வம், கோவைதமிழன் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் கோவை ராசா, கோட்டைசேது, சிறுத்தைஅக்கீம், தளபதி சபீக்,கோவை சம்பத், சிங்கை நாகராஜ்,சாலமன், குயின்ஸ் மணோகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Newsletter