சிஎம்எஸ் கல்லூரியில் சப்- ஜுனியர் தேசிய கபடி சேம்பினன்ஷிப் போட்டி


கோவை சிஎம்எஸ் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் தமிழ்நாடு அமேட்சூர் கபடி அசோசியேஷன் மற்றும் கோவை அமேட்சூர் கபடி அசோசியேஷன் இணைந்து தேசிய அளவிலான சப்- ஜுனியர் கபடி சேம்பினன்ஷிப் போட்டி கடந்த ஏப்ரல் 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற்றது.



இப்போட்டிகளில் இந்தியா முழுவதிலும் இருந்து 27 ஆண்கள் அணியும், 27 பெண்கள் அணியும் பங்கேற்றன. இதன் முதல் நாளில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் தங்களது திறமைகளை சாதூரியமாக வெளிப்படுத்தியது அனைவரையும் கவர்ந்தது.

இறுதிப் போட்டியில் ஆண்கள் அணியில் உத்திரபிரதேசத்தின் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அணி 49- 20 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கோப்பையினை கைப்பற்றியது.

பெண்கள் பிரிவில் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அணிக்கு எதிராக ஹரியானா அணி 21- 15 என்ற புள்ளிகளின்படி கோப்பையை கைப்பற்றியது. தொடர்ந்து மூன்றாம் இடத்தை தமிழ்நாடு மற்றும் இமாச்சலபிரதேச அணிகள் பெற்றன.

போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு நடைபெற்ற பரிசுகள் வழங்கும் விழாவில் ராஜஸ்தான் கபடி அசோசியேஷன் தலைவர் தேஜாவி சிங் கெலாட், சிஎம்ஸ் டிரஸ்ட் பொருளாளர் பி.ரவிக்குமார், ஏகேஎஃப்ஐ பொதுச் செயலாளர் தினேஷ்படேல் மற்றும் டிஎன்ஏகேஏ நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து, வெற்றிபெற்ற கபடி அணிக்கு தேஜாவி சிங் கெலாட் கோப்பைகளை வழங்கினார்.

Newsletter