76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..!

சுதந்திர தினத்தை முன்னிட்டு உடுமலையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



திருப்பூர்: மாரத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவர்களும், பொதுமக்களும் ஆர்வமுடம் கலந்துகொண்டு தங்களது தனித்திறனை வெளிக்காட்டினர்.



76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் கள் சங்கம், லெப்டினன்ட் சுபாஷ் ஐஏஎஸ் அகாடமி, உடுமலை லேப் அண்ட் எக்ஸ்ரேஸ் பிரியா நர்சிங் கல்லூரி இணைந்து போதைப் பொருள் நெகிழி ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் கடைபிடிப்பது பற்றிய விழிப்புணர்வுக்கான மாரத்தான் போட்டி நடத்தியது.



போட்டிகளை முன்னாள் ராணுவ வீரர் சங்க தலைவர் ராமலிங்கம் துவக்கி வைத்தார்.



இதில் 500க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் à®•லந்து கொண்டனர். லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை வளாகத்தில் இருந்து போட்டி தொடங்கியது.



போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க தலைவர் ராமலிங்கம், கோவை கேப்டன் வெள்ளியங்கிரி உடுமலை ஜிவிஜி மகளிர் கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் கற்பகவல்லி சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை நிறுவனர் செல்வம், அறக்கட்டளை கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

Newsletter