உடுமலையில் ரோட்டரி குழுமங்கள் சார்பில் விளையாட்டு போட்டிகள் - வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவிப்பு!

உடுமலையில் ரோட்டரி, ரோக்டரிக்ட், இன்னர் வீல் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கைப்பந்து, கால்பந்து, பேச்சு போட்டி உட்பட நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



திருப்பூர்: உடுமலை அருகே ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ரோட்டரி, ரோக்டரிக்ட், இன்னர் வீல் மற்றும் பள்ளிகளின் இன்டரேக்ட் சங்கங்கள் குழுமங்கள் இணைந்து உடுமலை வட்டார பள்ளி மாணவ மாணவிகளுக்கு கைப்பந்து, கால்பந்து, பேச்சு போட்டி உட்பட பல்வேறு விளையாட்டு மற்றும் கலை இலக்கிய போட்டிகளை நடத்தியது.



இதில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் பங்கு பெற்று போட்டிகளில் உற்சாகத்தோடு கலந்து கொண்டனர்.



போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.



உடுமலை ஆண்டாள் சீனிவாசன் லே-அவுட்டில் உள்ள ரோட்டரி இல்லத்தில் நடைபெற்ற விழாவில் அமராவதி சைனிக் பள்ளி முதல்வர் கேப்டன் மணிகண்டன் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

ரோட்டரி கிளப் சங்க நிர்வாகிகள் சிவப்பிரகாஷ் ,மீனாட்சி சுந்தரம், நாகராஜ், மீனாட்சி, குமரவேல், பாலகுருசாமி, கணேசன் மற்றும் விக்னேஷ் பொன்மணி கணேசன் மனோஜ் உட்பட அனைத்து பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter