தேசிய அளவிலான சிலம்ப போட்டி - சூலூர் பள்ளி மாணவி சாதனை!

நேபாளத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் சூலூரை சேர்ந்த 7ஆம் வகுப்பு சிபிஎஸ்சி பள்ளி மாணவியான அக்க்ஷிதாஸ்ரீ கலந்து கொண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சாதனை மாணவிக்கு பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


கோவை: நேபாளத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் சூலூரை சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்திய இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான சிலம்ப போட்டி நேபாளத்தில் நடைபெற்றது.

இதில் சூலூர் அனுக்ரஹா மந்திர் சி.பி.எஸ்.இ மேல்நிலை பள்ளியின் 7 வகுப்பு மாணவி சு.அக்க்ஷிதாஸ்ரீ, கலந்து கொண்டு தேசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.

இந்த சாதனை மாணவியை அனுக்ரஹா மந்திர் பள்ளியின் தாளாளர் ஷோபா, முதல்வர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ - மாணவிகள் உள்பட பலர் பாராட்டினர்.

மேலும், மாணவியை ஊக்குவிக்கும் விதமாக பள்ளியின் தாளாளர் ஷோபா மாணவிக்கு முழு கல்வி கட்டணச் சலுகை வழங்கியுள்ளார்.

Newsletter