முதல் 50 இடங்களை பிடித்த கோவை மாவட்ட டென்னிஸ் வீரர், வீராங்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் 50 இடங்களுக்குள் இடம் பெற்ற கோவை மாவட்டத்தை சேர்ந்த வீரர் வீராங்கனைகளுக்கு கோவை மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது. இதனை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.


கோவை: கடந்த 5 ஆண்டுகளில் முதல் 50 இடங்களை பிடித்த கோவை மாவட்ட டென்னிஸ் வீரர், வீராங்களுக்கு மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவித்தார்.

கோவை மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 50 இடங்களுக்குள் வெற்றி பெற்று சாதனை புரிந்த கோவை பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர் வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் விழா பீளமேடு பகுதியில் உள்ள பத்மாவதி அம்மாள் கல்ச்சுரல் சென்டரில் நடைபெற்றது.

இதில் இந்திய அளவில் முதலிடங்களை பெற்ற 13 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதனை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட டென்னிஸ் சங்கத்தின் தலைவர் சீனிவாசன், செயலாளர் சதீஷ்குமார் நாயர், பொருளாளர் நரேந்திரா, துணைத் தலைவர்கள் சதாசிவம், சொக்கலிங்கம், இணை செயலாளர் டேண்டூ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter