இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா தொடக்கம் - மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!

கோவை இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளியில் 2023 – 24 ஆண்டு விளையாட்டு விழா இன்று தொடங்கிய நிலையில் இதில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.


கோவை: இடிகரை அரசு உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளியில் 2023 – 24 ஆண்டு விளையாட்டு விழா பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இன்று தொடங்கியது.



இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சித்ரா அனைவரையும் வரவேற்று பேசினார். தொடர்ந்து தேசியக் கொடியேற்றி வைக்கப்பட்டது.

இதனையடுத்து, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை சி.ஆர்.ஐ பம்ப்ஸ் பிளானெட் ஹெட் வசந்தகுமார் ஏற்று விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் இளமுருகன் தலைமை உரையாற்றினார்.



சிறப்பு விருந்தினராக சி.ஆர்.ஐ பம்ப்ஸ் சி.எஸ்.ஆர் ஹெட் ராஜா கலந்துக்கொண்டார். ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் சந்தோஷ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.



அதன் பிறகு நீலம், மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு என 4 குழுக்களாக மாணவ, மாணவிகளின் தனி தனியாக நின்று கொண்டனர்.



அவர்களுக்கான ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், தட்டு எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், கபடி, வாலிபால், கோ-கோ, த்ரோ பால் உள்ளிட்ட பல விளையாட்டுகள் நடைபெற்றன.

இதற்கு உடற்கல்வி ஆசிரியர் நாகராஜ் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்து விளையாட்டு போட்டிகளை நடத்தினர்.

இந்த போட்டிகளில் தனி நபர் கோப்பைக்கான சப் ஜூனியர் ஆண்கள் பிரிவில் 6வது படிக்கும் மாணவர் வெற்றியும், பெண்கள் பிரிவில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவி சரபோனியும், ஜூனியர் ஆண்கள் பிரிவில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஹரிஸ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும், பெண்கள் பிரிவில் 8ம் வகுப்பு மாணவி சீலா மற்றும் சீனியர் ஆண்கள் பிரிவில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் யாதவ், 9ம் வகுப்பு படிக்கும் மாணவி வர்ஷாகுமாரி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் அதிக பரிசுகளை வென்ற குழுக்களுக்கு பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் தியாகராஜன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தினேஷ்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter