அகில இந்திய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இரண்டாமிடம்



சவுத்தி சரண்சிங் அரியான வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஹிசாரில் 17-வது அகில இந்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்களின் இடையேயான குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகள் மார்ச் மாதம் 25 முதல் 29 வரை நடைப்பெற்றன.   



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம் தடகளப்போட்டியில் ஒட்டு மொத்த புள்ளிகளின் அடிப்படையில் இரண்டாமிடம் பிடித்தது. பெண்கள் பிரிவில் உயரம் தாண்டுதல் மற்றும் 100 மீட்டர் தடை தாண்டும் ஒட்டத்தில் சிபானி தங்கப்பதக்கமும், நீளம் தாண்டுதல், முறை தாண்டுதலில் சங்கீதப்பிரியா தங்கப்பதக்கமும், குண்டு எறிதலில் வெள்ளிப்பதக்கமும் பெற்றார். யுவஸ்ரீ குண்டு எறிதலில் தங்கப்பதக்கம் வென்றார். மேகலா வட்டு எறிதலில் வெண்கலப்பதக்கம் கைப்பற்றினர்.



ஆண்கள் பிரிவில் ஈட்டி எறிதலில் ராஜேஷ்குமார் தங்கமும், பாண்டித்துரை 5000 மீட்டர் ஒட்டப் போட்டியில் வெள்ளிபதக்கமும், 1500 மீட்டர் ஒட்டம் மற்றும் 800 மீட்டர் ஒட்ட போட்டியில் வெண்கலப்பதக்கமும் வென்றார். வினாயகமுர்த்தி 5000 மீட்டர் ஒட்டப்போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்றார்.



ஆண்கள் கபாடி, ஆண்கள் கைப்பந்து மற்றும் பெண்கள் கைப்பந்து அணிகள் அறையிறுதி வரை முன்னேறின. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அணியை உடற்கல்வி இயக்குனர்கள் ராகவன் மற்றும் பார்திபன் வழி நடத்தி சென்றனர். வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி, பதிவாளர் ஆனந்தகுமார் மற்றும் வேளாண் கல்லூரி முதன்மையர் மகிமைராஜா ஆகியோர் பாராட்டினார்கள்.



Newsletter