துபாயில் நடந்த சர்வதேச யோகா போட்டி - தங்கம் வென்ற கோவை மாணவர்களுக்கு குவியும் பாராட்டு!

துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்த கோவையை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ரயில் நிலையத்தில் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


கோவை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான யோகா போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கோவையை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சர்வதேச அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் தேசிய அளவிலான யோகா போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

கடந்த 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா, துபாய், அபுதாபி ஷார்ஜா, அமெரிக்கா, மெக்சிகோ, கனடா, மஸ்கட், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.

சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில் மயூர் ஆசனம், திருவிக்கிரம் ஆசனம், சிரசாசனம், பூரண ஸலபாசனம் என பல்வேறு ஆசனங்கள் கொண்டு இந்த யோகா போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்களான கனித்ரா, தேவகர்ஷன், திவித் மற்றும் கல்லூரி மாணவர் கௌதம் உள்ளிட்ட நான்கு பேரும் தங்க பதக்கங்களை வென்று முதல் பரிசை பெற்று சாதனை படைத்தனர்.



யோகா போட்டியில் வென்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சர்வதேச அளவில் யோகா போட்டியில் சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மாணவ மாணவிகளுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

மசூம் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி 2023 - இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற கோவை அணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மசூம் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் கோவை அணி இறுதிப்போட்ட...

விளையாட்டை வளர்க்கும் வித்தையை சத்குருவிடம் கற்றுக் கொள்ளலாம் - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் புகழாரம்

நம் தேசத்தில் விளையாட்டு போட்டிகள் மற்றும் பாரம்பரிய கலைகளை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை சத்குருவிடம் இருந்து கற...

உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரியின் விளையாட்டு விழா கொண்டாட்டம்

உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2023 கல்வி ஆண்டிற்கான விளையாட்டு விழா கல்லூரியின...

உலக இதய தினத்தை முன்னிட்டு கோவையில் சைக்கிளத்தான் மற்றும் வாக்கத்தான் - கேஜி மருத்துவமனை ஏற்பாடு

உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்வதால் இதயத்தை பாதுகாக்கலாம் என்பதை வலியுறுத்தும் வகையில் கோவையில் கேஜி மருத்துவமனை சா...

ஆதியோகியில்‌ நாளை பிரம்மாண்டமாக நடைபெறும்‌ ஈஷா கிராமோத்சவம்‌ திருவிழா - மத்திய அமைச்சர்‌ அனுராக்‌ தாகூர்‌ பங்கேற்பு

கோவை ஆதியோகி முன்பு நாளை ஈஷா கிராமோத்சவம்‌ திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் மத்திய விளையாட்டு துறை அமைச்சர்‌...

துடியலூரில் பூப்பந்து போட்டி - கோவை பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரி அணி வாகையர் பட்டம்

கோவை துடியலூரை அடுத்த வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு...