கோவையில் எம்.பி.ஏ மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி - கோப்பையை வென்றது கற்பகம் அகாடமி அணி

ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.பி.ஏ மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் 13 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் எம்பிஏ மாணவர்கள் அணி கோப்பையை வென்றது.


கோவை: கோவைப்புதூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் (எஸ்.கே.சி.டி) மேலாண்மை நிர்வாகத்துறை சார்பில் எம்பிஏ மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

கல்லூரி வளாகத்தில் மே 2 ஆம் தேதி தொடங்கி மே 5 ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெற்றன. இதில், 13 எம்.பி.ஏ கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.

இறுதிப்போட்டியில், கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் எம்பிஏ மாணவர்கள் அணியானது, சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் அண்ட் மேனேஜ்மென்ட் கல்லூரி அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

வெற்றி பெற்ற அணிகளின் வீரர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி, அறங்காவலர் ஆதித்யா, முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்தனர்.



மேலும், வெற்றிபெற்ற அணிக்கு ரொக்கப் பரிசுகள், கோப்பைகள் மற்றும் பதக்கங்களை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ஜெகஜீவன், ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் நிர்வாக துறையின் டீன் ரமேஷ்குமார், மேலாண்மைத் துறையின் தலைவர் நிர்மலா தேவி ஆகியோர் வழங்கினர்.



இப்போட்டிக்கான ஏற்பாடுகளை மேலாண்மைத் துறையின் பேராசிரியர் சரவணன், உடற்கல்வி இயக்குநர் மாரிசெல்வம் மற்றும் எம்பிஏ மாணவர்கள் செய்திருந்தனர்.

Newsletter