பொள்ளாச்சியில் மாநில அளவிலான கபடி, கால்பந்து போட்டி

பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில், தொழிலதிபர் மகாலிங்கம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபடி மற்றும் கால்பந்து என சுழற்கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில், மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில், தொழிலதிபர் மகாலிங்கம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபடி மற்றும் கால்பந்து என சுழற் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த விளையாட்டு போட்டியில் கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி பகுதி சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.



பெண்களுக்கான எறிபந்து போட்டியில், பி.ஏ., பொறியியல் கல்லுாரி முதல் இடத்தையும், மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி இரண்டாமிடமும், வாணவராயர் வேளாண் கல்லுாரி மூன்றாமிடமும் பிடித்தது.



கபடி போட்டியில், கோவை ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லுாரி முதல் இடத்தையும், ஜி.சி.டி. கல்லுாரி இரண்டாமிடமும், மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி மூன்றாமிடமும் பிடித்தது.

கோகோ போட்டியில், மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி முதலிடமும், கொங்கு பொறியியல் கல்லுாரி இரண்டாமிடமும், மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியின் அலுமினி அணி மூன்றாமிடமும் பிடித்தது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகையும் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

Newsletter