மாநில அளவில் சிறந்த மாணவராக தாராபுரம் நகராட்சி பள்ளி மாணவர் தேர்வு!

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான இலக்கிய மன்ற போட்டிகளில் கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்திய தாராபுரம் என்.சி.பி. நகராட்சி மேல்நிலை பள்ளி மாணவர் பசுபதி, மாநில அளவில் சிறந்த மாணவராக தேர்வு செய்யப்பட்டு, அமெரிக்காவுக்கு அரசு செலவில் சுற்றுலா செல்ல உள்ளார்.


திருப்பூர்: சென்னையில் நடைபெற்ற இலக்கிய மன்ற போட்டியில் பங்கேற்று மாநில அளவில் சிறந்த மாணவராக தாராபுரம் நகராட்சி மேல்நிலை பள்ளி மாணவர் பசுபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் சமீபத்தில் மாநில அளவிலான இலக்கிய மன்றப்போட்டி நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி 8 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில், தாராபுரம் என்.சி.பி. நகராட்சி மேல்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் பசுபதி என்ற மாணவன் கலந்து கொண்டார்.

இந்நிலையில், மாணவர் பசுபதி, பல்வேறு வகையான இலக்கிய மன்றப் போட்டிகளில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி மாநில அளவில் சிறந்த மாணவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக மாணவர் பசுபதி, வரும் 28-ந் தேதி தமிழ்நாடு அரசு செலவில் அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்ல உள்ளார்.

இந்நிலையில், மாநில அளவில் சிறந்த மாணவராக தேர்வு செய்யப்பட்டு, சாதனை படைத்துள்ள மாணவர் பசுபதியை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி தாராபுரத்தில் நடைபெற்றது.



இந்த நிகழ்வில், நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் பாராட்டி பொன்னாடை போர்த்தி ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.



மேலும் இந்த நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பர்கத் நிஷா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரும், 6வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் முபாரக் அலி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter