உதகையில் தொடங்கிய குதிரை பந்தயம் - ஆர்வத்துடன் கண்டு களிக்கும் சுற்றுலா பயணிகள்!

நீலகிரியில் இன்று தொடங்கிய 136-ஆவது ஆண்டு குதிரை பந்தயத்தை, ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். முக்கிய பந்தயமான நீலகிரி 1000 கின்னீஸ் - ஏப்.14, 2000 கின்னீஸ் -ஏப்.15, தங்க கோப்பை - மே.21ஆம் தேதியும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நீலகிரி: கோடை சீசனை முன்னிட்டு உதகையில் தொடங்கியுள்ள குதிரை பந்தையத்தை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

உதகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் காலமாகும். அப்போது நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருவார்கள். அவர்கள் கண்டு ரசிக்கும் விதமாகவும் கோடை சீசனின் தொடக்கமாகவும் குதிரை பந்தயம் நடத்தப்படுவது வழக்கம்.



அதேபோல் 136-ஆவது ஆண்டான இந்தாண்டுக்கான குதிரை பந்தையம் இன்று தொடங்கியது.



இந்த பந்தயத்தில் பங்கேற்க சென்னை, மும்பை, பெங்களூரு, மைசூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 550 குதிரைகள் வந்துள்ளன.



அவற்றுடன் 37 ஜாக்கிகள், 24 பயிற்சியாளர்களும் வந்துள்ளனர்.

இந்த நிகழ்வின் முக்கிய பந்தயமான நீலகிரி 1000 கின்னீஸ் ஏப்ரல் 14ஆம் தேதியும், 2,000 கின்னீஸ் ஏப்ரல் 15ஆம் தேதியும், நீலகிரி தங்க கோப்பை மே 21ஆம் தேதியும் நடைபெறுகிறது. மேலும், இறுதி பந்தயமானது மே 28ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த பந்தயங்களை காண சிறுவர்கள், பெண்கள் என அனைவருக்கும் அனுமதி அளிக்கப்படுவதால் இன்று காலை ஏராளமான சுற்றுலா பயணிகள் குதிரை பந்தையத்தை காண குவிந்தனர்.

Newsletter