பார்க் கல்வி குழும முன்னாள் மாணவர்கள் நடத்திய கிரிக்கெட் போட்டி - கோப்பையை கைப்பற்றிய பார்க் தொழில்நுட்ப கல்லூரி!

பார்க் கல்வி குழுமத்தின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 17 அணிகள் கலந்து கொண்ட நிலையில், இறுதி போட்டியில் வெற்றி பெற்று பார்க் தொழில்நுட்ப கல்லூரி அணி கோப்பையை கைப்பற்றியது.


கோவை: கோவை பார்க் கல்வி குழும முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பார்க் தொழில்நுட்ப கல்லூரி அணி கோப்பையை கைப்பற்றியது.

பார்க் கல்வி குழுமத்தின் முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய அலுமினி கிரிக்கெட் கோப்பை-2023 கடந்த மார்ச் 23, 24, 25 & 26 ஆம் தேதிகளில் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த கிரிக்கெட் போட்டியில் கோவையை சேர்ந்த 17 பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் அணிகள் கலந்து கொண்டன. இதில் கடந்த மார்ச் 26 ஆம் தேதி நடைபெற்ற அரை இறுதி சுற்றில் பார்க் தொழில்நுட்ப கல்லூரி, இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியை வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

அதைத் தொடர்ந்து மார்ச் 27 ஆம் தேதி பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பார்க் தொழில்நுட்ப கல்லூரிக்கு இடையில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் வெற்றி பெற்று பார்க் தொழில்நுட்ப கல்லூரி அணியானது, அலுமினி கிரிக்கெட் கோப்பையை கைப்பற்றியது.



கோப்பையை வென்ற மாணவர்களை பார்க் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி மற்றும் பார்க் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் டாக்டர். அங்காள பரமேஸ்வரி ஆகியோர் பாராட்டினர்.

Newsletter