கோவையில் மாநில ‌அளவிலான கிரிக்கெட் போட்டி - இரண்டாம் இடம் பிடித்த கற்பகம் பல்கலைக்கழகம்!

கோவை குமரகுரு கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் குமரகுரு கல்லூரி முதல் பரிசையும், கற்பகம் பல்கலைக்கழக அணி இரண்டாம் பரிசையும் தட்டிச் சென்றது. கற்பகம் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெங்கடாஜலபதி வீரர்களை பாராட்டினார்.


கோவை: கோவை குமரகுரு கல்லூரியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

கோவை குமரகுரு கல்லூரியில் கடந்த 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 8 அணிகள் கலந்து கொண்டன. முதல் காலிறுதி போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக அணி, பண்ணாரி அம்மன் கல்லூரி அணியை எதிர்கொண்டது.

இதில் முதலில் ஆடிய பண்ணாரி அம்மன் கல்லூரி அணி 18 ஓவர்களில் 70 ரன்கள் அடித்தது. தொடர்ந்து ஆடிய கற்பகம் பல்கலைக்கழக அணி 6 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அரைஇறுதி போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக அணி கிருஷ்ணா கல்லூரி அணியை எதிர்கொண்டது.

இதில் முதலில் ஆடிய கிருஷ்ணா கல்லூரி அணி, 20 ஓவர்களில் 131 ரன்கள் அடித்தது. தொடர்ந்து ஆடிய கற்பகம் பல்கலைக்கழக அணி 15 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இறுதிப்போட்டியில் கற்பகம் பல்கலைக்கழக அணி, குமரகுரு கல்லூரி அணியை எதிர்கொண்டது. முதலில் ஆடிய கற்பகம் பல்கலைக்கழக அணி 20 ஓவர்களில் 114 ரன்கள் அடித்தது. தொடர்ந்து ஆடிய குமரகுரு கல்லூரி அணி 20 ஓவர்களில் 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று முதலிடமும், கற்பகம் பல்கலைக்கழக அணி இரண்டாம் இடமும் வென்றது.

வெற்றி பெற்ற வீரர்களை கற்பகம் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெங்கடாஜலபதி, பதிவாளர் முனைவர் ரவி, உடற்கல்வி இயக்குநர் சுதாகர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Newsletter