தாராபுரம் தனியார் மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா - வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் செயல்பட்டுவரும் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விழாநடைபெற்றது.



விழாவிற்கு மகாராணி கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். தாராபுரம் காவல்துறை ஆய்வாளர் (மதுவிலக்குப் பிரிவு) கோவர்தனாம்பிகை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.



மாணவ மாணவியர் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி விழா துவக்கி வைக்கப்பட்டது. அதன் பிறகு ஒலிம்பிக் கொடியேற்றி கொடி அணிவகுப்பு நடத்தினர். இதை தொடர்ந்து உலக சமாதானத்தை வலியுறுத்தி கல்லூரி நிர்வாகத்தினரால் வெண்புறா பறக்கவிடப்பட்டது. மாணவ மாணவியர்களால் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பிரமிடு, Free Hand Exercise, மாறுவேடப் போட்டி போன்ற கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டது.



இவ்விழாவில், கைப்பந்து, கபாடி, கிரிக்கெட்டி, Throw ball, Shot-put, Diec throw Jasvetin, 100 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் உட்பட பல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மகாராணி கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் கலைமான், சுப்ரமணியன், தமிழரசன்,அப்துல் ரஹ்மான் முகமது அப்துல்காதர் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் தமிழ்ச்செல்வி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter