கோவையில் பிரமாண்ட பைக் பந்தயம் - வீரர்களின் சாகசத்தால் அனல் பறந்த மைதானம்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கோவை ஈச்சனாரியில் தளபதி கோப்பைக்கான பைக் பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு பதக்கம், ரொக்கப்பரிசுகளை கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.


கோவை: கோவை ஈச்சனாரி ரத்தினம் கல்லூரி எதிரிலுள்ள மைதானத்தில் இந்த பைக் பந்தயம் நடைபெற்றது.



இந்த போட்டியை பகுதி செயலாளர் கார்த்திக் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பிரகாஷ் வார்டு செயலாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.



தென்னிந்திய அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்.



வழக்கமான பைக் பந்தயம் போல் இல்லாமல், பரபரப்பாக, மைதானத்தில் புழுதி பறக்க நடந்தது.



சிறுவர்களுக்கு 3 லேப், பெண்களுக்கு 6 லேப், ஆண்களுக்கு 12 லேப் என்கிற அடிப்படையில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.

வெற்றி பெற்றவர்களுக்கு தளபதியார் டிராஃபியும் பரிசு, பதக்கம், ரொக்கப் பணமும் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இந்த பைக் பந்தயத்தை ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

Newsletter