அகில இந்திய ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டி - கோவை கற்பகம் பல்கலை 4-ம் இடம்!

கோவை கற்பகம் பல்கலைக்கழகம் சார்பில் கடந்த மார்ச் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற்ற அகில இந்திய ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை கற்பகம் பல்கலைக்கழக அணி, 4வது இடத்தை பிடித்தது.


கோவை: அகில இந்திய ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை கற்பகம் பல்கலைக்கழக அணி, 4வது இடத்தை பிடித்துள்ளது.

கோவையில் உள்ள கற்பகம் பல்கலைக்கழகம் சார்பாக கற்பகம் இன்ஜினியரிங் கல்லூரியில் அகில இந்திய ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த மார்ச் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இந்த போட்டியில், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழக அணிகள் பங்கேற்றன. இதில் கற்பகம் நிகர் நிலை பல்கலைக்கழகம், சாவித்திரிபாய் பீலே யுனிவர்சிட்டி பூனே, மகாத்மா காந்தி யுனிவர்சிட்டி வாரணாசி, பாரதி வித்யா பீன்ஸ் யுனிவர்சிட்டி புனே ஆகிய அணிகள் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றன.

லீக் சுற்றின் முடிவில் சாவித்திரிபாய் பீலே யுனிவர்சிட்டி 6 புள்ளிகள் உடன் முதல் இடத்தையும், மகாத்மா காந்தி யுனிவர்சிட்டி நான்கு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், பாரதி வித்யா பீத் 2 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும், கற்பகம் பல்கலை அணி நான்காவது இடத்தையும் பெற்றன.

போட்டிகள் நிறைவடைந்த நிலையில், வெற்றி பெற்ற அணிகளுக்கு கற்பகம் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ரவி, தென்னிந்திய ரோல்பால் சங்கத்தின் செயலாளர் சுப்ரமணியன், கற்பகம் பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.

Newsletter