ஸ்பெயினில் நடைபெற உள்ள மெனார்கோ கால்பந்தாட்ட போட்டிகளில் கோவை அணி பங்கேற்கிறது


ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா மெனார்கோவில் 11 மற்றும் 13 வயதிற்கு உட்பட்டோருக்கான சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகள் வரும் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறவுள்ளது.



இதில் இந்தியா, ஜப்பான், பிரேசில், இங்கலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 60 அணிகள் பங்கேற்கின்றன. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இது குறித்து பர்ஸ்ட் கிக் ஸ்கூல் ஆப் சாக்கர் இயக்குனர் சரவணன் கூறும்போது, கடந்த 15 ஆண்டுகளாக அணியாக இயங்கி வந்த இந்த அணி 2013-ம் ஆண்டு கால்பந்தாட்ட கழகமாக பதிவு செய்யபட்டது. வரும் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற உள்ள மெனார்கோ கால்பந்தாட்ட போட்டிகளில் கோவை அணி பங்கேற்க உள்ளது. 



இதில், 11 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் 8 பேர் வீதமும், 13 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் 11 வீரர்கள் விளையாடுவார்கள். மேலும் இந்த அணி சென்னை, ஹைதராபாத் மற்றும் கோவாவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஸ்பெயினில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. 

லீக் சுற்று முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு புள்ளிகளின் அடிப்படையில் தகுதி பெறும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி அதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் விளையாடுவர். வெற்றி பெறும் அணிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1 கோடி ரூபாய் பரிசும் கோப்பை மற்றும் பதக்கங்களும் வழங்கப்படும்" என்றார்.

கோவையிலிருந்து வரும் 9ம் தேதி சென்னை செல்லும் கோவை அணியினர் 10ம் தேதி ஸ்பெயின் சென்றடைகின்றனர். 12ம் தேதி லீக் சுற்று போட்டிகளில் விளையாடும் நம் வீரர்கள் வெற்றி பெற வாழ்த்துவோம்.

Newsletter